கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை

by Staff / 23-07-2024 05:17:42pm
கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை

மதுரை, சோழவந்தான் அருகே, கரட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அருள் இருதய மேரி இவர்களின் மகன் சந்தோஷ் வயது 19. மதுரை கோரிப்பாளையம் பகுதியில்,உள்ள தனியார் கல்லூரியில் இளங்கலை மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறார். நேற்று இரவு சந்தோஷ் கரட்டுப்பட்டியில் உள்ள தனது வீட்டிற்கு பின்புறம் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இரவு 11 மணி வரை மகனை காணாமல் தேடிய பெற்றோர் வீட்டிற்கு பின்புறம் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில், இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த சோழவந்தான் காவல் துறையினர் சந்தோஸின் உடலை மீட்டு, வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மூன்றாம் ஆண்டு கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via