தேனியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஒட்டப்பட்ட சுவரொட்டியால் பரபரப்பு.

by Editor / 24-09-2023 10:19:16pm
 தேனியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஒட்டப்பட்ட   சுவரொட்டியால் பரபரப்பு.

 தமிழகத்தில் பாரதியஜனதா மற்றும் கூட்டணி கட்சியான அதிமுக இரண்டு கட்சிகளுக்குமிடையே  பிரச்சாரப்போர் மூண்டு கூட்டணி பிளவு ஏற்படும் நிலைக்கு தள்ளப்பபட்டுள்ளது.இந்தநிலையில் திராவிடக்கட்சிகளை மிஞ்சுமளவுக்கு இன்று தேனி நகர பகுதிகளில் பாரதிய ஜனதா கட்சியின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப்பிரிவு சார்பில்  ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் மக்கள்  மத்தியில் பரப்பரப்பை உருவாக்கும் வண்ணம் முக்கிய பகுதிகளில் ஓட்டப்பட்டுள்ளது.அதில் 

கிளம்பு!! கிளம்பு!!
 அந்து போச்சு 
கிளம்பு!! கிளம்பு!!

அலப்பற கிளப்புறோம்!

தலைவர் நிரந்தரம்!! என  

வாசகங்கள் அடங்கிய  இந்த சுவரொட்டிகளை மாநில செயலாளர் வசந்த பாலாஜி பெயரில் தகவல் தொழிநுட்பம் & சமூக ஊடக பிரிவு சார்பில்  போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

 

Tags : பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஒட்டப்பட்ட சுவரொட்டியால் பரபரப்பு.

Share via