7 சொகுசு கார்,160 கிலோ கஞ்சா,4.40இலட்சம் ரொக்கத்துடன் கஞ்சா கடத்தல் கும்பல் தலைவன் கைது.

by Editor / 14-03-2023 10:11:49pm
7 சொகுசு கார்,160 கிலோ கஞ்சா,4.40இலட்சம் ரொக்கத்துடன் கஞ்சா கடத்தல் கும்பல் தலைவன் கைது.

 மதுரை மாநகரில் கஞ்சா விற்பனையினை தடுக்கும் பொருட்டு தீவிர நடவடிக்கையின் பேரில் தொடர் வாகன தணிக்கை நடைபெற்று வருகின்றது. அதன் தொடர்ச்சியாக கடந்த 11ஆம் தேதியன்று ஈ 2.மதிச்சியம் காவல் நிலையஎல்லைக்குட்ப்பட்ட  வைகை வடகரை ரோடு ஆசாரி தோப்பு சந்திப்பில் சார்பு ஆய்வாளர் வைரக்குமார் மற்றும் காவலர்கள்  ரகசிய தகவலின் பெயரில் வாகன தணிக்கை செய்த பொழுது அந்த வழியாக வந்த சொகுசு காரின் பின்பக்க டிக்கியை  திறந்து சோதனை செய்தபோது அதிலிருந்து 43 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. மேலும் இந்த காரை ஓட்டி வந்த திண்டுக்கல் பகுதியைச் சார்ந்த கார்த்தி என்பவர் கைது செய்யப்பட்டார். மேலும் அவரிடம் இருந்து ரூபாய் 10  ஆயிரம் ரொக்கமும்,ஒரு செல்போன் ஒன்றும் கைப்பற்றப்பட்டது, அவர் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தின் படி அவரது நண்பர் பரமேஸ்வரர் என்பவர் திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள பென்ஷன் காம்பவுண்டில் உள்ள வாகன காப்பகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு காரில் 45 கிலோ கஞ்சாவை மறைத்து வைத்திருப்பதாக கொடுத்த தகவல்பேரில்  அங்கு சென்று அந்த காரில் இருந்த 45 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது, மொத்தம் 88 கிலோ கஞ்சாவுடன், இரண்டு கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன,மற்றொரு பகுதியில்  போலீசார் நடத்திய வாகன சோதனையில் திருப்பாலை காவல் நிலையத்திற்குப்பட்ட கடச்சநேந்தல் பகுதியில் வந்த சொகுசு காரை போலீசார் மறித்து  சோதனை செய்ததில் அந்தகாரில் 42 கிலோ கஞ்சாவும் அந்த வாகனத்தை ஓட்டி வந்த பரமேஸ்வரன் என்பவரும் கைது செய்யப்பட்டு அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மதுரை கடச்சநேந்தலில் உள்ள கார் பார்க்கில் கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட மேலும் மூன்று சொகுசு கார்கள் கைப்பற்றப்பட்டன, எதிரி பரமேஸ்வரன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள பென்சில் காம்பவுண்டில் உள்ள வாகன காப்பகத்தின் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு சொகுசு காரில் 30 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது, மேலும் எதிரியின் வீட்டில் கஞ்சா விற்பனை செய்துவைத்திருந்த பணம் 4,30 இலட்சம்,.வாடிக்கையாளர்களை தொடர்பு கொள்ள பயன்படுத்தி வந்த 12 செல்போன்கள், ஒரு லேப்டாப், மற்றும் ஒரு மோடம் ,உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.கைது செய்யப்பட்ட பரமேஸ்வரன் மீது மதுரை மாநகரில் இரண்டு கஞ்சா வழக்குகளும் தமிழ்நாட்டில் பிற மாவட்டங்களில் 12 திருட்டு வழக்குகளும் உள்ளன. இந்த  இரண்டு வழக்குகளில் சேர்த்து மொத்த 160 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யபபட்டுள்ளது.இதன் மதிப்பு ரூபாய் 32 லட்சம் ஆகும், ஏழு சொகுசு கார்கள், 13 செல்போன்கள், இரண்டு மோடம், இரண்டு லேப்டாப், மற்றும் ரொக்கப்படும் 4,40 இலட்சம்.ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன. வழக்கில் சிறப்பாக பணிபுரிந்த காவல் ஆய்வாளர்கள் சார்பு ஆய்வாளர்கள் மற்றும் காவல் அறிஞர்களை மதுரை மாநகர காவல் ஆணையாளர் நரேந்திர நாயர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.

7 சொகுசு கார்,160 கிலோ கஞ்சா,4.40இலட்சம் ரொக்கத்துடன் கஞ்சா கடத்தல் கும்பல் தலைவன் கைது.
 

Tags :

Share via