ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் ஆலோசகருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்

by Staff / 07-01-2024 02:15:09pm
ஜார்க்கண்ட் முதல்வர்  ஹேமந்த் சோரனின் ஆலோசகருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்

ஜார்க்கண்டில் சட்டவிரோத சுரங்க வழக்கில் முதல்வர் ஹேமந்த் சோரனின் நெருக்கமானவா்களுக்கு அமலாக்கத்துறை இயக்குனர் அலுவலகம் (ED) சம்மன் அனுப்பியுள்ளது.. இந்நிலையில், ஹேமந்த் சோரனின் ஊடக ஆலோசகர் அபிஷேக் பிரசாத் மற்றும் சபிகஞ்ச் துணை கமிஷனர் ராம் நிவாஸ் யாதவ் ஆகியோருக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ரூ.1000 கோடி சட்டவிரோத சுரங்க வழக்கில் ராம் நிவாஸ் 11ஆம் தேதியும் பினோத் சிங் 15ஆம் தேதியும் அபிஷேக் பிரசாத் 16ஆம் தேதியும் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது..

 

Tags :

Share via