பாஜக எம்பி கங்கனாவுக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கக்கோரி மனு

by Staff / 05-02-2025 04:18:24pm
பாஜக எம்பி கங்கனாவுக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கக்கோரி மனு

பாலிவுட் நடிகையும், பாஜக எம்பியுமான கங்கனா ரணாவத் – பாலிவுட் பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் ஆகியோர் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்துக் கொண்டதால், இருவர் தரப்பிலும் அவதூறு வழக்குகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. கடந்த 2016 முதல் கோர்ட்டில் ஆஜராகாமல் 40 வாய்தாக்கள் வாங்கிய நடிகையும், பாஜக எம்பியுமான கங்கனாவுக்கு ‘லாஸ்ட் சான்ஸ்’ கொடுக்கப்பட்டுள்ளது. அதேநேரம் அவருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்க பாடலாசிரியர் மனு தாக்கல் செய்துள்ளார்.

 

Tags :

Share via