ஆற்றில் மூழ்கி மூன்று பேர் பலி

ஈரோடு மாவட்டம் கொடுமுடி காசிபாளையம் காவிரியாற்றில் மூழ்கி மூன்று பேர் இன்று பலியாகியுள்ளனர். கொத்தாளம் புதூர் மதுரை வீரன் கோயிலுக்கு தீர்த்தம் எடுக்கச் சென்ற போது மூவரும் ஆற்றில் மூழ்கி பலியாகி உள்ளனர். உயிரிழந்தவர்கள் ஜெகதீஷ் (18), சவுத்ரி (14), குப்புராஜ் (17) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஆற்றில் இறங்கிய போது நீச்சில் தெரியாததால் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. சிறுவன் ஒருவனின் உடலை மீட்ட நிலையில், இரண்டு பேரின் சடலங்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags :