மணிப்பூர் வன்முறை.. அடக்கம் செய்ய புதைகுழி

மணிப்பூர் மாநிலத்தில் வசிக்கும் மேதி இன மக்கள், தங்களை எஸ்.டி பிரிவில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஆனால் இதற்கு பழங்குடியின மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், கடந்த சில நாட்களாக அங்கு கலவரம் கொழுந்து விட்டு எரிகிறது. இந்நிலையில், மாநிலத்தில் நடந்து வரும் வன்முறையில் கொல்லப்பட்ட 35 பேரை குக்கி-ஜோ சமூகத்தினர் அடக்கம் செய்ய திட்டமிட்டிருந்த சர்ச்சந்த்பூர் மாவட்டத்தின் ஹொலாய் கோபி கிராமத்தில் உள்ள புதைகுழியில் புதைக்க, தற்போது உள்ள நடைமுறையை பின்பற்ற வேண்டும் என மணிப்பூர் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Tags :