ராமஜெயம் கொலைக்கும் ஜெயக்குமார் மரணத்திற்கும் தொடர்பு

by Staff / 11-05-2024 12:42:56pm
ராமஜெயம் கொலைக்கும் ஜெயக்குமார் மரணத்திற்கும் தொடர்பு

திமுக அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் மார்ச் 28, 2012-ல் நடைப்பயிற்சிக்கு சென்ற போது கடத்திக் கொல்லப்பட்டார். இது கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டது. இந்த கொலையும் சமீபத்தில் சடலமாக மீட்கப்பட்ட நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணமும் ஒரே மாதிரியாக இருப்பதாக சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ராமஜெயத்தை கொலை செய்து எரிக்க முயன்றனர், அதேபோல் ஜெயக்குமாரை கொலை செய்து எரித்துள்ளனர். இருவரும் ஒரே பாணியில் கை, கால்கள் கட்டப்பட்டு இறந்து கிடந்தனர். இவற்றை வைத்து இரண்டு கொலைகளும் ஒரே கூலிப் படையினரால் நடந்திருக்கும் என சிறப்பு புலனாய்வுக் குழு சந்தேகிக்கின்றனர்.

 

Tags :

Share via