பள்ளி மாணவர்களுக்கு புகையிலை விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால் குண்டர் சட்டம் தென்காசி எஸ்.பி.கடும் எச்சரிக்கை.

by Editor / 25-11-2023 08:49:49pm
 பள்ளி மாணவர்களுக்கு புகையிலை விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால் குண்டர் சட்டம்  தென்காசி எஸ்.பி.கடும் எச்சரிக்கை.

தென்காசி மாவட்டத்தில்

தென்காசி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதை தடுக்கும் விதமாக மாவட்ட காவல்துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று தென்காசியில் தனியார் திருமண மண்டபத்தில் வர்த்தக சங்கத்தினர், வியாபாரிகள் சங்கத்தினர் மற்றும் ஓட்டுநர்களுடன் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் குமார் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில்  புகையிலையை மாணவர்களுக்கு விற்பனை செய்வது சட்டப்படி குற்றம் எனவும் இது மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் என இவ்வாறான செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் மீறினால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தார்.
மேலும் மாவட்டத்தில் இதுவரை 224 கடைகளில் தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் பள்ளிக்கு அருகில் புகையிழை பொருட்கள் விற்பனை செய்த 11 கடைகள் சீல் வைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். மேலும் ரூபாய் 80 ஆயிரம் விதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து செய்தியாளர் சந்தித்து அவர் கூறுகையில், மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு புகையிலை விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் கடைகள் சீல் வைக்கப்பட்டு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புகையிலை விற்பனை தொடர்பாக ஏதேனும் புகார் தெரிவிக்க வேண்டும் என்றால் தன்னுடைய தொலைபேசி எண்ணிற்கு (9498166566) நேரடியாக தொடர்பு கொள்ளலாம் எனவும் புகார் அளிக்க கூடியவர்களின் தகவல்கள் ரகசியம் காக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

 

Tags : தென்காசி எஸ்.பி.கடும் எச்சரிக்கை.

Share via