மோடியை கேலி செய்த அரவிந்த் கெஜ்ரிவால்

நம் நாட்டின் பிரதமர் படித்தவராக இருக்க வேண்டும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மோடியை மறைமுகமாக தாக்கி தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார். தற்போது இந்த ட்வீட் வைரல் ஆகி வருகிறது. "2000 ரூபாய் நோட்டுகளை கொண்டு வருவதன் மூலம் ஊழல் ஒழியும் என்று பிரதமர் நரேந்திர மோடி முதலில் கூறினார். தற்போது 2000 ரூபாய் நோட்டுகளை தடை செய்வதன் மூலம் ஊழல் ஒழிந்து விடும் என்று சொல்கிறார்.படிக்காத பிரதமரிடம் யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். இதனால் பொதுமக்கள் தான் அவதிப்பட வேண்டியிருக்கிறது" என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
Tags :