டேனியல் பாலாஜியின் மரணம் அதிர்ச்சி அளிக்கிறது: கமலஹாசன்

by Staff / 30-03-2024 02:29:22pm
டேனியல் பாலாஜியின் மரணம் அதிர்ச்சி அளிக்கிறது: கமலஹாசன்

தம்பி டேனியல் பாலாஜியின் திடீர் மரணம் அதிர்ச்சியளிக்கிறது என நடிகரும், மக்கள் நீதி மய்ய தலைவருமான கமலஹாசன் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், இளவயது மரணங்களின் வேதனை பெரிது. பாலாஜியின் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆறுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். கண் தானம் செய்ததனால் மறைந்த பின்னும் அவர் வாழ்வார். ஒளியை கொடையளித்துச் சென்றிருக்கும் பாலாஜிக்கு என் அஞ்சலி என பதிவிட்டுள்ளார்.

 

Tags :

Share via