ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனை

by Editor / 06-01-2023 08:28:25am
ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனை

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் பிரசித்தி பெற்றதும் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த தலமான திருக்குற்றாலநாத சுவாமி திருக்கோவிலில் திருவாதிரைத் திருவிழாவை முன்னிட்டு ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்.


தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள குற்றாலத்தில் பிரசித்தி பெற்றதும் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த தலமான குற்றாலநாத சுவாமி ஆலயத்தில் ஆண்டுதோறும் சித்திரை விசு திருவிழா, ஐப்பசி விசு திருவிழா, மார்கழி திருவாதிரை திருவிழாக்கள் 10 நாள்கள் வெகுவிமர்சையாக கொண்டாடப்படும்.

அந்தவகையில் கடந்த 28ம் தேதி அதிகாலையில் மார்கழி மாத திருவாதிரை திருவிழாவை முன்னிட்டு குற்றாலநாதர் சன்னதியில் உள்ள கொடிமரத்தில் 16 வகை முலிகை பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு வேத மந்திரங்களுடன் பஞ்ச வாத்தியங்கள் இசைக்க கொடியேற்றப்பட்டது.

அதைத்தொடர்ந்து தினந்தோறும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனை  நடத்தப்பட்டது
இவ்விழாவில் முக்கிய நிகழ்வான பத்தாம் திருநாளான இன்று திரிகூட மண்டபத்தில் நடராஜர்க்கு மஞ்சள், பால், இளநீர், பன்னீர், சந்தம், உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம் செய்யப்பட்ட நடராஜர்  ஆருத்ரா தரிசனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் தாண்டவ தீபாராதனை காட்டப்பட்டது இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் பெற்று சென்றனர்.

இவ்விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகளும், குற்றாலம்  வர்த்தக சங்கத்தினர் செய்திருந்தனர்.

ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனை
 

Tags :

Share via