ஆதரவற்றவர்கள் இல்லத்தில் இருந்து 26 சிறுமிகள் மாயம்

மத்திய பிரதேசத்தில் உள்ள ஒரு ஆதரவற்றவர்கள் இல்லத்தில் இருந்து 26 சிறுமிகள் காணாமல் போயுள்ளனர். காணாமல் போன சிறுமிகள் குஜராத், ஜார்கண்ட், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்தவர்கள் என தெரிகிறது. இந்த சம்பவம் சனிக்கிழமை வெளிச்சத்திற்கு வந்தது. இதுகுறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்திவருகின்றனர். காணாமல் போன சிறுமிகள் குறித்து காப்பகத்தின் இயக்குநர் அனில் மேத்யூவிடம் விசாரித்தபோது அவர் முறையான பதில் அளிக்காததால் அவர் மீது போலீசார் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.
Tags :