திருநெல்வேலி - தென்காசி ரயில் பாதையில் தெற்கு ரயில்வே அதிகாரிகள் மார்ச் 13 இல் ஆய்வு.

by Editor / 11-03-2023 11:21:51pm
திருநெல்வேலி - தென்காசி ரயில் பாதையில் தெற்கு ரயில்வே அதிகாரிகள் மார்ச் 13 இல் ஆய்வு.

திருநெல்வேலி  - தென்காசி இடையே  81.51 கிமீ. ரயில் பாதை மின்மயமாக்கும் பணி முடிவடைந்துள்ளது. இதனை முன்னிட்டு, மார்ச் 13, 2023 அன்று தெற்கு ரயில்வே முதன்மை தலைமை மின் பொறியாளர் இந்த பாதையை ஆய்வு செய்ய உள்ளார்.

தெற்கு ரயில்வே, முதன்மை தலைமை மின் பொறியாளர்  ஏ.கே. சித்தார்த்தா,மதுரை கோட்டமேலாளர் அனந்த்  இரயில்வே மின்மயமாக்கல் மற்றும் மதுரை கோட்டத்தின் உயர் அதிகாரிகளுடன் இணைந்து இந்தப் பகுதியை ஆய்வு மேற்கொள்ள உள்ளார். 

இந்த ஆய்வு திருநெல்வேலியில் காலை 9:30 மணிக்கு தொடங்கி, மதியம் 01:45 க்கு தென்காசியில் முடிவடைகிறது. தொடர்ந்து அதிவேக சோதனை ஓட்டம் உள்ளிட்ட ஆய்வுகள் மாலை 04:30 மணியளவில் திருநெல்வேலியில் முடிவடையும்.

இந்த பிரிவில் உள்ள முக்கிய ரயில் நிலையங்கள் - சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், கீழக்கடையம், பாவூர்ச்சத்திரம் மற்றும் தென்காசி ஆகியவை அமைந்துள்ளன.

திருநெல்வேலி-தென்காசி ரயில்வே மின்மயமாக்கலின் ஒரு பகுதியாக வீரவநல்லூரில் புதிய துணை மின் நிலையம் தொடங்கப்பட உள்ளது. மேட்டூர் மற்றும் பேட்டையில் மின் கட்டுப்பாட்டு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், ஆழ்வார்குறிச்சி ஆகிய இடங்களில் துணை பிரிவு மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

 

Tags :

Share via