+2 பொதுத்தேர்வு :சட்டமன்ற கட்சி தலைவர்களிடம் கருத்து கேட்க முடிவு அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்

பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்து அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களிடம் கருத்து கேட்கப்பட்டிருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பான ஆலோசனைக்கு பின் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “சட்டமன்ற கட்சி தலைவர்களிடம் கருத்து கேட்க முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். மருத்துவ நிபுணர்களுடனும் ஆலோசனை கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து தரப்பினர் தெரிவிக்கும் கருத்துக்களின் அடிப்படையில் இறுதி முடிவு எடுக்கப்படும். 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து முதல்வர் இறுதி முடிவு எடுப்பார். ஆன்லைன் கல்விக்கான வழிமுறைகள் தயாராகி வருகிறது . விரைவில் முதல்வரிடம் வழங்குவோம்,தேர்வை நடத்தவில்லை எனில் மேல்படிப்புக்கு மாணவர்கள் எப்படி செல்வார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.” எனக் கூறினார்.
Tags :