6 மாத குழந்தைக்கு கல்லீரல் மாற்று அறுவை.

by Staff / 11-06-2024 03:27:57pm
6 மாத குழந்தைக்கு  கல்லீரல் மாற்று அறுவை.

சென்னை க்ளெனேகிள்ஸ் ஹெல்த் சிட்டியில் உள்ள மருத்துவர்கள் ஆறு மாத பெண் குழந்தைக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளனர். பூடானைச் சேர்ந்த குழந்தை ஒன்று பிறந்ததில் இருந்தே மஞ்சள் காமாலை மற்றும் கல்லீரல் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்துள்ளது. மேல் சிகிச்சைக்காக குழந்தையை அழைத்துக்கொண்டு சென்னை வந்தனர். தாயின் கல்லீரல் பகுதி தானமாக குழந்தைக்கு பொருத்தப்பட்டது. தாயும் குழந்தையும் நல்ல ஆரோக்கியத்துடன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக கல்லீரல் மாற்று சிகிச்சை அறுவை இயக்குனர் டாக்டர் ஜாய் வர்கீஸ் தெரிவித்தார்.

 

Tags :

Share via