தமிழ்நாட்டில் இருந்து கடத்தி கேரளாவில் விடப்பட்ட தெருநாய்கள்

by Staff / 11-09-2023 03:52:36pm
தமிழ்நாட்டில் இருந்து கடத்தி கேரளாவில் விடப்பட்ட தெருநாய்கள்

கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள கிராம பஞ்சாயத்துகள் தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த அவற்றுக்கு கருத்தடை செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டிலிருந்து நாய்கள் கொண்டுவந்து விடப்பட்டதாக மக்கள் புகார் அளித்துள்ளனர்.எல்லைகளில் சோதனைகளைத் தவிர்ப்பதற்காக மாற்றுப்பாதை வழியாக வாகனங்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டு நாய்கள் கொண்டுவரப்படுவதாக கூறப்படுகிறது. காட்டாக்கடை, பூவாச்சல், விளப்பில் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மட்டும் 100க்கும் மேற்பட்ட நாய்கள் வாகனங்களில் கொண்டு வரப்பட்டு தெருக்களில் விடப்பட்டுள்ளன. இவை தமிழகத்திற்கு திரும்புவதை தடுக்கும் வகையில் எல்லையில் இருந்து தொலைவில் உள்ள கிராமங்களில் விடப்படுவதாக தெரிய வந்துள்ளது. இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Tags :

Share via

More stories

Logo