வால்பாறையில் கன மழை எச்சரிக்கை.

by Editor / 25-06-2024 10:28:48pm
வால்பாறையில் கன மழை எச்சரிக்கை.

கோவை மாவட்டம் வால்பாறையில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை புரிந்து வருகின்றனர்.  வால்பாறையில் கன மழை எச்சரிக்கை விடுக்க பட்ட நிலையில் கூலாங்கல் ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதால் சுற்றுலா பயணிகள் ஆற்றில் குளிக்கவோ புகைப்படம் எடுக்கவோ அனுமதி இல்லை என வட்டாட்சியர் அறிவித்துள்ளார். மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. மேற்படி கூலாங்கல் ஆற்றில்  வால்பாறை வட்டாட்சியர் வாசுதேவன்,  காவல் துறை  ஆய்வாளர் ஆனந்தகுமார்  ஆகியோர் ஆய்வு செய்தனர்.சுற்றுலா பயணிகளிடம் ஆற்றில் இறங்கவோ குளிக்கவோ கூடாது என்று அறிவுரை வழங்கினார்.

 

Tags : வால்பாறையில் கன மழை எச்சரிக்கை

Share via

More stories