ஆன்லைன் விபச்சாரம் - 2 பெண் உட்பட 3 பேர் கைது
தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ்ராவத் உத்தரவுபடி கும்பகோணம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ்குமார் மேற்பார்வையில் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் பேபி, காவல் உதவி ஆய்வாளர் கீர்த்திவாசன் தலைமையில், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் ராஜா, செல்வகுமார், தலைமை காவலர்கள் பாலசுப்பிரமணியம், நாடிமுத்து, பார்த்திபநாதன், செந்தில்குமார், ஜனார்த்தனன், பெண் காவலர் சீதா ஆகியோர் அடங்கிய தனி படையினருக்கு வந்த ரகசிய தகவலின் பெயரில் கும்பகோணம் அன்னை அஞ்சுகம் நகரில் செல்போன் மூலமாக ஆன்லைன் விபச்சாரம் செய்து வந்த குற்றவாளிகள்
சோழபுரத்தை சேர்ந்த பரமேஸ்வரன், கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த ரம்யா, முருக்கங்குடியைச் சேர்ந்த பிரேமி ஆகியோரை கைது செய்தனர். மேலும் இரண்டு பெண்கள் மீட்கப்பட்டனர்.மேலும் இவர்களிடம் இருந்து ரூ. 10,000 பணம், 3 இருசக்கர வாகனங்கள், 6 செல்போன்கள் பறிமுதல் செய்தனர். மேற்படி நபர்களிடம் விசாரணை செய்த பிறகு குற்றவாளிகள் மூன்று பேரையும் நீதிமன்ற உத்தரவுபடி சம்பந்தப்பட்ட சிறையில் அடைந்தனர். பாதிக்கப்பட்ட பெண்கள் இருவரை பெண்கள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
Tags :
















.jpg)


