குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் தடை

by Admin / 26-05-2025 10:00:25am
குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் தடை

குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரிப்பு --- மாவட்டத்தில் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அணைத்து அருவிகளிலும் சுற்றுலா பணிகள் குளிப்பதற்கு தடை

 

தென்காசி மாவட்டத்தில் அதிக கன மழை பெய்யக்கூடும் என்பதால் ஆரஞ்சு அலாரட்  விடுத்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அந்த வகையில் மாவட்டத்தில் நேற்று முதல் தொடர்ந்து சாரல் மழையானது பெய்து வருகிறது.

இந்த மழையின் காரணமாக குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி, புலி அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

மேலும் இன்று ஆரஞ்சு அலாரட் விடுக்கப்பட்ட நிலையில் அதிக கன மழை பெய்யக்கூடும் என்பதால் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் காவல்துறையினர் அருவி கரையோரம் பேரிகார்டுகள் அமைத்து சுற்றுலா பயணிகள் வருகையை கண்காணித்து வருகின்றனர்.

குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் தடை
 

Tags :

Share via