புஷ்பா வீட்டிற்கு சீல் வைத்த ஒன்றிய அரசு
அதிமுக மக்களவை உறுப்பினராக இருந்த சசிகலா புஷ்பாவின் பதவிகாலம் முடிவடைந்து 2 ஆண்டுகள் கடந்தும் அவருக்கு ஒதுக்கிய டெல்லி அரசு குடியிருப்பை காலி செய்ய ஒன்றிய அரசு பல முறை நோட்டீஸ் அனுப்பியது. இந்த நிலையில் தற்போது பதவியில் இருக்கும் அதிமுக எம்.பி விஜயகுமார் டெல்லியில் வீடு ஒதுக்கீடு செய்ய பரிந்துரை செய்துள்ளார். இதனிடையே அவரது வீட்டில் அடிக்கடி மது விருந்து நடப்பதாகவும் இதனால் தங்களுக்கு இடையூறு ஏற்படுவதாக அக்கம் பக்கத்தினர் புகார் அளித்து வந்தனர்.ஆனால் இதை எதையும் கண்டுகொள்ளாத சசிகலா புஷ்பா அரசு குடியிருப்பை காலி செய்யாமல் இருந்ததால் அவரது வீட்டில் உள்ள பொருட்களை வெளியேற்றிய அரசு அதிகாரிகள் வீட்டைப் பூட்டி சீல் வைத்துள்ளனர். ஜெயலலிதா இறந்த பிறகு பாஜக கட்சியில் சேர்ந்த சசிகலா புஷ்பா தற்போது தமிழக பாஜக கட்சியின் மாநில துணைத் தலைவராக உள்ளார்.
Tags :


















