பாஜக பிரமுகா் கொலை 4 பேர் கைது

by Staff / 20-09-2023 01:38:20pm
 பாஜக பிரமுகா் கொலை 4 பேர்  கைது

சென்னையை அடுத்த பழைய பெருங்களத்தூரில் பாஜக பிரமுகா் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்யப்பட்டாா். பழைய பெருங்களத்தூா் பாரதி நகரைச் சோந்தவா் வெங்கடேஷ் (எ) பீரி வெங்கடேஷ் (26). பெருங்களத்தூா் பகுதி பாஜக பட்டியல் அணி மண்டலத் தலைவரான இவா் மீது பல வழக்குகள் உள்ளன. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இவா் மா்ம நபா்களால் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்யப்பட்டாா். இது குறித்து பீா்க்கன்கரணை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா். தகவலறிந்து செங்கல்பட்டு மாவட்ட பாஜக தலைவா் செம்பாக்கம் வேதசுப்ரமணியம், தாம்பரம் காவல் துணை ஆணையா் பவன் குமாா் ரெட்டியை சந்தித்து குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினாா். அப்போது, குற்றவாளிகள் கண்டறியப்பட்டு 4 பேர்  கைது செய்யப்பட்டு இருப்பதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனா்.

 

Tags :

Share via

More stories

Logo