நான் 100% உங்களுக்காக உண்மையாக இருப்பேன்-தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்

by Admin / 15-04-2026 01:23:09am
நான் 100% உங்களுக்காக உண்மையாக இருப்பேன்-தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்

திருப்பூரில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் அரசு ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கையான பழைய ஓதுவது திட்டத்தை மீண்டும் கொண்டு வருவது குறித்து தமிழக வெற்றி கழக அரசு பணிவுடன் பரிசீலிக்கும். காவல்துறையினிலே அடிப்படை ஊதிய மாத ரூபாய் 18,200 இல் இருந்து 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும். மேலும் அவர்களுக்கு வார விடுமுறை மற்றும் மன அழுத்தம் நிறைந்த பணிகளுக்கு கூடுதல் ஊதியம் வழங்கப்படும். சுழற்சி முறையில் அவர்களுக்கு வார ஓய்வு அளிக்கப்படும்என்றும் தெரிவித்தார். கைத்தறி மற்றும் விசைத்தறி வைத்திருக்கும் ஒவ்வொரு நெசவாளர் குடும்பத்திற்கும் வங்கி கணக்கில் ஆண்டுக்கு ரூபாய் 30,000 நேரடியாக செலுத்தப்படும்.  அவர்களுக்கு ரூபாய் 10 லட்சம் ஆயுள் காப்பீடு மற்றும் ஓய்வூதிய ரூபாய் 3000 ஆக உயர்த்தப்படும் ..தமிழக வெற்றி கழகத்தின் முழுமையான தேர்தல் அறிக்கை புத்தகமாக ஏப்ரல் 16ஆம் தேதி வெளியிடப்படும்.  நான் 100% உங்களுக்காக உண்மையாக இருப்பேன். உங்களுக்காகத்தான் நான் வந்திருக்கிறேன் . அதனால் எனக்கு ஒரு முறை வாய்ப்பு வழங்குமாறும் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

.

நான் 100% உங்களுக்காக உண்மையாக இருப்பேன்-தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்
 

Tags :

Share via
Logo