ராமஜெயம் கொலை வழக்கில் 20 பேரிடம் உண்மை தன்மை அறியும் சோதனை

by Staff / 23-10-2022 01:28:21pm
ராமஜெயம் கொலை வழக்கில் 20 பேரிடம் உண்மை தன்மை அறியும் சோதனை

திமுக முதன்மை செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம், கடந்த 2012ம் ஆண்டு மார்ச் 29ம் தேதி மர்ம நபர்களால் கடத்தி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை சிறப்பு புலனாய்வு தனிப்படை எஸ்பி ஜெயக்குமார், டிஎஸ்பி மதன், இன்ஸ்பெக்டர் ஞானவேல் ஆகியோர் அடங்கிய குழுவினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதுவரை 1400க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தி, 20 பேர் அடங்கிய இறுதிபட்டியல் தயார் செய்துள்ளனர்.

இந்நிலையில், சிபிசிஐடி டிஜிபி ஷகில் அக்தர் அளித்த பேட்டியில், "ராமஜெயம் கொலை வழக்கில் விசாரணை முழுமையாக, முறையாக நடைபெற்று வருகிறது. துப்பு கிடைத்துள்ளது. விசாரணை முடிந்த பின்னர் தான் முழு விபரங்களை தெரிவிக்க முடியும். அதற்கு முன்பாக நான் எதையும் கூற முடியாது. கடந்த 6 மாதங்களாக தீவிரமாக விசாரணை செய்து வருகிறோம். 20 பேரிடம் உண்மை தன்மை அறியும் சோதனை நடைபெற உள்ளது" என்றார்.

 

Tags :

Share via

More stories