உக்ரைன் சுதந்திர தினத்தில் ரஷியா தாக்குதல்: 22 பேர் பலி

by Editor / 25-08-2022 02:49:58pm
உக்ரைன் சுதந்திர தினத்தில் ரஷியா தாக்குதல்: 22 பேர் பலி

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 6 மாதங்களை தாண்டிவிட்டது. ஆனால் இன்னும் போர் முடிவுக்கு வரவில்லை. நேற்று உக்ரைன் தனது 33-வது சுதந்திர தினத்தை கொண்டாடியது. இந்த தினத்தில் ரஷியா தனது தாக்குதலை தீவிரபடுத்தும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பொதுமக்களுக்கு ஏற்கனவே எச்சரிக்கை விடுத்து இருந்தார். அவர் சொன்னது போல் ரஷியா நேற்று இரவு உக்ரைன் மீது தனது தாக்குதலை நடத்தியது. மத்திய உக்ரைன் டினிப்ரோ பெட்ரோவஸ்க் பகுதியில் உள்ள சாப்லினோ ரெயில் நிலையத்தில் ரஷிய படையினர் ஏவுகணை தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் 22 அப்பாவி மக்கள் பலியானார்கள். 50-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். ரயிலின் 5 பெட்டிகள் எரிந்து சேதமானது.

 

Tags :

Share via

More stories