திரிணாமுல் முன்னாள் எம்எல்ஏ கைது: என்ஐஏ அதிரடி
மேற்குவங்கத்தின் பான்கர் குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ சவ்கத் மொல்லாவை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் நாட்டு வெடிகுண்டு தயாரித்தபோது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார், 3 பேர் காயமடைந்தனர். இந்த வழக்கை விசாரிக்கும் என்ஐஏ, மொல்லாவின் வீடு மற்றும் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தியது. குண்டு தயாரிப்பவர்களை அழைத்துச் சென்ற கார் டிரைவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டார்.
Tags :


















