ஆளுநருக்கு எதிராக நீதிமன்றத்தில் போராடி வென்றது போல் நீட் தேர்வு விவகாரத்திலும் வெற்றி பெறுவோம்.கனிமொழி.

திருவாரூர் தெற்கு வீதியில் த தமிழ்நாடு மாநில ஜமாத்துலா உலமா சபை சார்பில் நடைபெற்ற கண்டன பொதுக் கூட்டத்தில் திமுக துணை பொது செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கலந்துகொண்டார்.இந்த கண்டண பொதுக்கூட்டத்தில் வக்பு சட்ட திருத்தத்தை எதிர்த்து கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது.இதில் தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா,திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் இஸ்லாமியர்கள் பொதுமக்கள் என இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியின் இறுதியில் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி கூறியதாவது
நாட்டிலே மதவாத அரசியல் கையில் எடுத்து கூடிய பாஜக அரசு இஸ்லாமியர்களுக்கு எதிராக கொண்டு வந்துருக்க கூடிய வக்பு சட்டத்திற்கு மக்கள் இடையே ஒரு பிரிவினையை இஸ்லாமியர்கள் மனதில் ஒரு பயத்தை உருவாக்கக்கூடிய வகையிலே இந்த நாட்டின் இற இறையாண்மைக்கு எதிராக மத நல்லிணத்திற்கு எதிராக கொண்டுவரபட்டிருக்கக்கூடிய இந்த மசோதாவை எதிர்த்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலே நம்முடைய முதலமைச்சரின் ஆணைக்கிணங்க திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி தமிழ்நாட்டிலேயே சட்டமன்றத்திலேயே இதற்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறது அந்த வழியிலே இங்கு நடக்கக்கூடிய தமிழ்நாடு முழுவதும் நடக்கக்கூடிய இந்த கண்டன பொதுக்கூட்டத்தில் நான் கலந்து கொண்டிருக்கிறேன் தொடர்ந்து இதற்கு எதிராக போராடுவேன்.
நீட் தேர்வுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு அனுகியிருக்கு என்பது குறித்த கேள்விக்கு... உச்சநீதிமன்றத்தில் பல காலமாக போராடி கவர்னருக்கு கிட்டத்தட்ட ஒரு முதலமைச்சர் சொல்லிக் கொடுக்கக்கூடிய கவர்னருக்கு ஒரு கோடு கான்டெக்ட் இருக்க வேண்டும் கிட்டத்தட்ட அவங்க ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு தீர்ப்பை சொல்லி இருக்கிறார்கள் நிச்சயம் நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு நாங்கள் அங்கே சென்று இருக்கின்றோம் என்றார்.
Tags : ஆளுநருக்கு எதிராக நீதிமன்றத்தில் போராடி வென்றது போல் நீட் தேர்வு விவகாரத்திலும் வெற்றி பெறுவோம்.கனிமொழி.