ரூ.1,477 கோடி கடன் தள்ளுபடி - பட்ஜெட்டில் அறிவிப்பு

அடுத்த நிதியாண்டில் விவசாய பயிர்க்கடன் ரூ.1,477 கோடி தள்ளுபடி செய்யப்படும் என வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்த அவர், அடுத்த நிதியாண்டில் விவசாய பயிர்க்கடனாக ரூ.1,477 கோடி தள்ளுபடி செய்ய நிதி விடுவிக்கப்படும். பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ் இதுவரை ரூ.10 ஆயிரத்து 346 கோடி தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. வேளாண்துறைக்கு என மொத்தமாக ரூ.45 ஆயிரத்து 661 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.
Tags :