அடுக்குமாடி குடியிருப்பில் கஞ்சா விற்பனை செய்து வந்த 5 திருநங்கைகளை கைது 

by Editor / 03-02-2024 10:00:29pm
அடுக்குமாடி குடியிருப்பில் கஞ்சா விற்பனை செய்து வந்த 5 திருநங்கைகளை கைது 

தாம்பரம் மாநகர காவல் எல்கைக்கு உட்பட்ட இடங்களில் வெளி மாநிலங்களில் இருந்து கஞ்சா வாங்கி வந்து விற்பனை செய்பவர்களை  கண்காணித்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி தாம்பரம் மாநகர காவல் ஆணையாளர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் செம்மஞ்சேரி காவல் ஆய்வாளர் தலைமையிலான தனிப்படையினர் எழில் நகர் பெரும்பாக்கம் பகுதியில் சிலர் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் சோதனை நடத்தினர். எழில் நகர் பெரும்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்பிலுள்ள வீட்டில் வைத்து கஞ்சா விற்பனை செய்து வந்த அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்ற அபர்ணா, குமரேசன் என்று சுஜி, அப்பு என்று ஆனந்தி, பிரவீன் என்ற ரதி, ராஜேஷ் என்ற அபி, ஆகியே  திருநங்கைகளை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து ரூபாய் 6 லட்சம் மதிப்பிலான 60 கிலோ எடையுள்ள கஞ்சா வை பறிமுதல் செய்தனர்.கைதுசெய்யப்பட்ட திருநங்கைகள் அனைவரும்   கல்லூரி மாணவர்களுக்கு மற்றும் சுற்றுப்புறபிபகுதியில்  சில்லறை விற்பனை செய்வதற்காகவும் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து கஞ்சா வாங்கி வந்து எழில் நகர் பகுதியில் விற்பனை செய்தது தெரிய வந்தது இதன் தொடர்ச்சியாக 5 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர்.

 

Tags : அடுக்குமாடி குடியிருப்பில் கஞ்சா விற்பனை செய்து வந்த 5 திருநங்கைகளை கைது 

Share via

More stories

Logo