திமுக அரசை கண்டித்து துண்டு பிரசுரம் வினியோகம்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் 25 வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு 90% வாக்குறுதிகளை நிறைவேற்றாத. மற்றும் உணவுப் பொருட்களின் விலை உயர்வு, கட்டுமான பொருட்களின் விலை உயர்வு ஆகியவற்றை கண்டித்து பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கிய மாவட்ட அதிமுக ஜெயலலிதா பேரவையினர். வேடசந்தூர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இருந்து ஊர்வலமாகச் சென்ற அதிமுகவினர் வடமதுரை ரோடு, பஸ் நிலையம், ஆத்து மேடு ஆகிய பகுதிகளில் பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு பிரச்சாரம் ஏற்படுத்தினர். பஸ் நிலையம் முன்பாகவும் ஆத்து மேட்டிலும் பிரச்சாரம் செய்தனர்.
இந்நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் மேற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் பாரதி முருகன் தலைமை வகித்தார். மாநில அதிமுக இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளரும், முன்னாள் வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் விபிபி பரமசிவம், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளரும், முன்னாள் வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினருமான தென்னம்பட்டி பழனிச்சாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர். வேடசந்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜான்போஸ், வேடசந்தூர் பேரூர் செயலாளர் பாபுசேட், ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் நிலா தண்டபாணி, பேரூர் ஜெயலலிதா பேரவை செயலாளர் பூக்கடை ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் மாவட்ட ஒன்றிய பேரூர் நிர்வாகிகள் சார்பணி நிர்வாகிகள் மகளிர் அணி நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Tags :