இன்று தவெக தலைவர் விஜய் சீரடி செல்கிறாா்.
நேற்று தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தனி விமானத்தின் மூலம் மதுரையில் இருந்து தலை மார்க்கமாக திருச்செந்தூர் கோவில் அதிகாலை சென்று சாமி தரிசனம் செய்தார். அதனைத் தொடர்ந்து இன்று அவர் சீரடி சாய்பாபா கோவிலுக்கு காலை பத்து முப்பது மணி அளவில் பாபாவை தரிசனம் செய்ய உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்த நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தங்களுடைய தேர்தல் முடிவு சாதகமாக அமைய வேண்டும் என்று இறை தரிசனத்தில் இறங்கி உள்ளனர். மே நான்காம் தேதி தமிழக உள்பட ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. அன்றே எந்த கட்சி இறுதி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் என்பது தெரிய வரும்..
Tags :



















