பவர் ஸ்டார் - நடிகை வனிதா திருமணக்கோலம் 

by Editor / 24-07-2021 03:58:13pm
பவர் ஸ்டார் - நடிகை வனிதா திருமணக்கோலம் 

 

வனிதா விஜயகுமாரும், நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனும் மாலை மாற்றிக் கொண்டது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இதுகுறித்து விளக்கம் அளிப்பதற்காக செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்த வனிதா விஜயகுமார், பவர் ஸ்டார் சீனிவாசன் இயக்கத்தில் தான் நடிக்கும் பிக்கப் டிராப் படத்தின் போஸ்டர்கள் அவை என்று எடுத்துரைத்தார்.
அப்போது பேசிய வனிதா விஜயகுமார், நான் 4 அல்ல, 40 திருமணம் கூட செய்து கொள்வேன். அது என்னுடைய உரிமை. பெண்களைப் பற்றித் தொடர்ந்து இந்த சமூகம் அவதூறாக பேசி வருவதால் தான் தற்கொலைகள் அதிகரிப்பதாக வனிதா கூறினார். இதுகுறித்து விளக்கம் அளித்த பவர்ஸ்டார் சீனிவாசன், இந்த சமூகத்தில் நூற்றுக்குத் தொண்ணூறு பேர் சரியான வாழ்க்கையை வாழ்வது இல்லை, ஆனால் வெளியே சொல்லாமல் வாழ்கிறார்கள். அந்தவகையில் வனிதா விஜயகுமார் ஒரு இரும்பு பெண்மணி என்று தெரிவித்தார்.

 

Tags :

Share via