சொந்தத்தொகுதியில் ஆய்வுப்பணியில் முதல்வர்.

ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் பலத்த காற்றுடன் அதிகனமழை பெய்தது. இதன் காரணமாக சென்னையின் முக்கிய பகுதிகள் மற்றும் சுரங்கப்பாதைகளில் மழை நீர் தேங்கியது. தொடர்ந்து, அதனை மாநகராட்சி நிர்வாகிகள் அகற்றினர். இந்நிலையில், மழை ஓய்ந்த நிலையில், கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அப்போது, “எங்கேயும் தண்ணீர் தேங்கல சார்” என பொதுமக்கள் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.
Tags : சொந்தத்தொகுதியில் ஆய்வுப்பணியில் முதல்வர்.