தமிழகத்தில் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழகத்தில் 3 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மக்களுடன் முதல்வர் திட்டத்துக்கான சிறப்பு அதிகாரியாக ஐஏஎஸ் அதிகாரி மதுசூதன் ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா பிறப்பித்துள்ள உத்தரவில், தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மேலாண் இயக்குநரான ஐஏஎஸ் அதிகாரி பி. சங்கர், வேளாண்மை-உழவர் நலன்துறை சிறப்பு செயலாளராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு சாலை திட்ட இயக்குநரான ஐஏஎஸ் அதிகாரி எஸ். பிரபாகர், தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மேலாண் இயக்குநராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். நில அளவை மற்றும் நில வரித்துறை இயக்குநரான ஐஏஎஸ் அதிகாரி மதுசூதன் ரெட்டி மக்களுடன் முதல்வர் திட்டத்துக்கான சிறப்பு அதிகாரியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :