ரயில்வே நிலைய பெட்ரோல் பங்க் அருகே கேட்பாரற்ற கிடந்த இரண்டு பைகளால் பரபரப்பு.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ரயில்வே நிலையம் ரயில்வே நிலைய பெட்ரோல் பங்க் அருகே 2 பைகள் கேட்பாரற்று கிடந்தது இதை எடுத்து அங்கிருந்தவர்கள் திண்டிவனம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் .அங்கு வந்த திண்டிவனம் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் முருகன் தலைமை காவலர் பாஸ்கர் மற்றும் போலீசார் அங்கு வந்து கேட்பாரற்றுக் கிடந்த இரண்டு பைகளை சோதனை நடத்தினர்.
அதில் ஏதேனும் வெடிகொண்டு இருக்குமோ அல்லது வேறு ஏதேனும் மர்ம பொருள் இருக்குமா என போலீசார் கவனமாக இரண்டு பையும் திறந்து பார்த்தனர் திறந்து பார்த்து சோதனை செய்ததில் அதில் கூத்து ஆடுபவர்கள் பயன்படுத்தப்படும் துணிகள் இருந்தது தெரியவந்தது இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.பல மணி நேரம் நீடித்த வெடிகுண்டு பீதி நீங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags : ரயில்வே நிலைய பெட்ரோல் பங்க் அருகே கேட்பாரற்ற கிடந்த இரண்டு பைகளால் பரபரப்பு.