இடைத்தேர்தல்: 1,300 ஆசிரியர்களுக்கு 6ஆம் தேதி முதற்கட்ட பயிற்சி.

by Editor / 31-01-2023 09:16:41am
 இடைத்தேர்தல்: 1,300 ஆசிரியர்களுக்கு 6ஆம் தேதி முதற்கட்ட பயிற்சி.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தல் பணிக்காக 1,300 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒரு வாக்கு சாவடி மையத்திற்கு 4 பேர் வீதம் 952 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆசிரியர்களுக்கு 3 கட்ட பயிற்சி அளிக்கப்படவுள்ளது. வருகிற 6ஆம் தேதி முதற்கட்ட பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில், வாக்குப்பதிவு அன்று எவ்வாறு செயல்பட வேண்டும், மின்னணு வாக்குப்பதிவு கருவிகளை கையாளும் விதம், ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் அதனை சரி செய்யும் வழிமுறை உள்பட பல்வேறு கட்ட பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது.

 

Tags :

Share via

More stories