3 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல்

by Staff / 20-03-2022 04:11:33pm
3 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல்

 
2019-ம் ஆண்டு நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலின் வாக்கு எண்ணிக்கை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள குட் ஷெப்பர்ட் பள்ளியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த 2019ம் ஆண்டு ஜூன் மாதம் தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு தேர்தல் நடைபெற்றது.

இதில் பாக்யராஜ் தலைமையில் ஒரு அணியினரும், நாசர் தலைமையில் ஒரு அணியினரும் போட்டியிட்டனர். வாக்குகள் அனைத்தும் பதிவான நிலையில், தேர்தலை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. 

அதில், தேர்தலை செல்லாது என உத்தரவிட்ட நீதிமன்றம், பதிவான வாக்குகளையும் எண்ணுவதற்கு தடை விதித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து நாசர், விஷால் மற்றும் கார்த்தி ஆகியோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், வாக்குகளை எண்ணுவதற்கு உத்தரவிட்டனர்.
 
அதன்படி, இன்று காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தேர்தல் அதிகாரி, நடிகர் சங்க தனி அதிகாரி மற்றும் போட்டியிட்ட வேட்பாளர்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.

அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேர்தலில் நாசர் தரப்புக்கே அதிக வெற்றி வாய்ப்பு என கூறப்படும் நிலையில், வாக்குகள் அனைத்தும் எண்ணப்பட்டு அதன் முடிவுகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்பின்னர் ஓரிரு நாட்களில் முடிவுகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


 

 

Tags :

Share via