சிவகிரியில் காரில் கஞ்சா கடத்திய பிரபல கஞ்சா ரவுடி கார்த்திக் அதிரடி கைது

by Editor / 08-04-2025 02:28:32pm
சிவகிரியில் காரில் கஞ்சா கடத்திய பிரபல கஞ்சா ரவுடி கார்த்திக் அதிரடி கைது

தென்காசி மாவட்டம் முழுவதும் கஞ்சாவிற்கு எதிராக அதிரடி நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் அவர்கள் உத்தரவிட்டதை அடுத்து  சிவகிரி காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் சார்பு ஆய்வாளர் வரதராஜன்  மற்றும் போலீஸ் பார்ட்டி சகிதம் தென்காசி To மதுரை ரோட்டில் வாகன தணிக்கை செய்தபோது அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமாக வந்த கேரளா பதிவெண் கொண்ட காரை நிறுத்தி சோதனை செய்தபோது காரை ஓட்டி வந்த சிவகிரி உள்ளாரை சேர்ந்த பூலித்துரை மகன் காசித்துரை என்ற உள்ளார் கார்த்திக் அவர் ஓட்டி வந்த காரில் சுமார் இரண்டு கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அவரை கைது செய்து வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.மேலும் இவர் மீது 10 க்கும் மேற்பட்ட கஞ்சா வழக்கு மற்றும் வழிப்பறி வழக்கும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via

More stories