ஒரே பகுதியில் இரண்டு இடங்களில் தனித்தனி அணியாக நீர் மோர் பந்தல் அமைத்து பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கிய திமுகவினர்.

தென்காசி மாவட்ட திமுகவில் கோஷ்டி பூசல் இருந்து வருவது அனைவரும் அறிந்த சம்பவமே இந்த நிலையில் இன்று தென்காசி திமுக தெற்கு மாவட்டமான கடையநல்லூர் பகுதியில் நகராட்சி அலுவலகம் முன்பு நகர்மன்ற தலைவர் ஹபிபூர் ரகுமான் தலைமையில் பொதுமக்களுக்கு நீர்மோர் மற்றும் குளிர்பானங்கள் தர்பூசணி ஐஸ் உள்ளிட்டவை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது இதில் நகர மன்ற தலைவர் ஹபிபூர் ரகுமான் மற்றும் மருத்துவர் அணி டாக்டர் சஞ்சீவி உள்ளிட்டோர் கலந்து கொண்டு இதனை துவக்கி வைத்தனர்.
இந்த நிலையில் கடையநல்லூர் பேருந்து நிலையம் அருகே திமுக நகர இளைஞரணி சார்பில் முன்னாள் மாவட்ட செயலாளர் செல்லத்துரை தலைமையில் நகரச் செயலாளர் அப்பாஸ் நகர் மன்ற துணைத் தலைவர் ராசையா உள்ளிட்டோர் பங்கேற்று தனியாக ஓர் நீர் மோர் பந்தலை திறந்து நீர்மோர் மற்றும் தர்பூசணி ஐஸ் குளிர்பானங்கள் உள்ளிட்டவைகளை பொதுமக்களுக்கு வழங்க தொடங்கினர். கடையநல்லூர் நகரப் பகுதிகளில் இரண்டு இடங்களில் ஒரு சேர திமுகவினர் தனித்தனியாக கோஷ்டி பூசலை நிரூபிக்கும் வண்ணம் பொதுமக்களுக்கு கோடை வெயிலில் இருந்து விடுதலை பெறுவதற்காக குளிர்பானங்கள் தர்பூசணி மோர் உள்ளிட்டவைகளை வழங்கும் நிகழ்வை தொடங்கி வைத்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர் கோஷ்டி பூசல் ஒரு பக்கம் இருந்தாலும் மக்கள் குளிர்ந்த ஆகாரங்களை அருந்தி மகிழ்ச்சியுடன் சென்ற வண்ணம் உள்ளனர்.

Tags :