மாநில இளைஞரணி தலைவராக முகுந்தன் என ராமதாஸ் அறிவித்ததால் பரபரப்பு.
பாமக புத்தாண்டு பொதுக்குழுவில் பாமக மாநில இளைஞரணி தலைவராக முகுந்தன் என்பவரை நியமித்தது தொடர்பாக அக்கட்சியின் சிறப்பு பொதுக்குழு மேடையில் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் இடையே வெடித்த மோதல்!'கட்சியில் சேர்ந்து 4 மாதங்களே ஆனவருக்கு பதவி எதற்கு? எனக்கு யாரும் தேவையில்லை' என அன்புமணி எதிர்ப்புத் தெரிவித்தார். ''முகுந்தன்தான் பாமக இளைஞரணி தலைவர்'' என நிறுவனர் ராமதாஸ் அழுத்தம் திருத்தமாக தெரிவித்ததார். அதைத் தொடர்ந்து பேசிய அன்புமணி, "என்னைச் சந்திக்க விரும்புபவர்கள், சென்னை பனையூரில் உள்ள எனது தனி அலுவலகத்துக்கு வரலாம்" எனக் கூறியபடி வெளியேறியதால் கூட்டத்தில் பரபரப்பு உருவானது.புதிய இளைஞரணி தலைவராக நியமிக்கப்பட்ட முகுந்தன் குறித்த தகவல் வெளியானது.பாமக நிறுவனர் ராமதாஸின் மூத்த மகள் காந்திமதியின் மகன் முகுந்தன் என தகவல்.முன்னதாக ஜி.கே.மணியின் மகன் தமிழ்குமரன் இளைஞரணி தலைவர் பதவியிலின் இருந்தது குறிப்பிடத்தக்கது.
Tags : மாநில இளைஞரணி தலைவராக முகுந்தன் என ராமதாஸ் அறிவித்ததால் பரபரப்பு.