பழைய குற்றால அருவியில் 16 நாட்களுக்குப் பிறகு சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறை அனுமதி.

by Editor / 28-12-2024 03:59:46pm
பழைய குற்றால அருவியில் 16 நாட்களுக்குப் பிறகு சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறை  அனுமதி.

பழைய குற்றால அருவியில் 16 நாட்களுக்குப் பிறகு சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி - பராமரிப்பு பணிகள் காரணமாக சுற்றுலா பயணிகள் முன்னெச்சரிக்கையுடன் குளித்துச் செல்ல வனத்துறை அறிவுறுத்தல்

தென்காசி மாவட்டத்தில் கடந்த 12ஆம் தேதி பெய்த கனமழை காரணமாக குற்றால அருவிகளில் கடுமையான காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இந்த காட்டாற்று வெள்ளத்தால் குற்றால கரையோரம் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ள சேதங்களை சரி செய்த பின்னர் மெயின் அருவி, ஐந்தருவிகளில் குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.பழைய குற்றாலத்தை பொருத்தவரை வெள்ளசேதங்களை சரி செய்வதில் தாமதம் ஏற்பட்ட நிலையில் 16 நாட்களாக சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் வியாபாரிகள் மற்றும் விவசாயிகளின் தொடர் கோரிக்கையை அடுத்து பழைய குற்றால அருவியில் பராமரிப்பு பணிகள் ஒரு சில வகைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் பழைய குற்றால அருவியில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதன் காரணமாக சுற்றுலா பயணிகள் முன்னெச்சரிக்கையுடன் குளித்து செல்லவுன் வனத்துறை அறிவுறுத்தியுள்ளது

பழைய குற்றால அருவியில் ஏற்பட்ட கடுமையான காட்டாற்று வெள்ளத்தில் பாதுகாப்பு தடுப்புக் கம்பிகள், சாலையோர தடுப்புகள் உள்ளிட்டவைகள் அடித்துச் செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது

 

Tags : பழைய குற்றால அருவியில் 16 நாட்களுக்குப் பிறகு சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறை அனுமதி.

Share via

More stories