உலகின் மிக மிக உயரமான துருக்கி நாட்டின் 24 வயது பெண்; 7 அடி 7 அங்குலம் உயரம்
உலகின் உயரமான பெண்ணாகத் துருக்கியைச் சேர்ந்த ருமேசா கெல்கி என்ற பெண் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரது உயரம் 7 அடி 7 அங்குலம் அவரது கையின் நீளம் 24.5 செமீ; காலின் நீளமோ 30.5 செமீ.
இது குறித்து கின்னஸ் உலக சாதனை அமைப்பின் தலைமை அதிகாரி கிரைக் கிளிண்டே கூறும்போது, “கூட்டத்துக்கு இடையே நிமிர்ந்திருக்கும் அவர் பலருக்கும் முன்னுதாரணம். நான் இந்தச் செய்தியை உலகிற்கு அறிவிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். துருக்கியைச் சேந்த ருமேசா கெல்கி உலகின் உயரமான பெண்ணாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அவரது உயரம் 7 அடி 7 அங்குலம்” என்று மகிழ்ச்சியோடும், ஆச்சரியத்தோடும் தெரிவித்துள்ளார். கெல்கியின் முக்கியப் பொழுதுபோக்கு நீச்சல் ஆகும். கெல்கி உலகின் உயரமான பெண்ணாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது மகிழ்ச்சி அளிப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
வீவர் என்ற நோயின் காரணமாக கெல்கிக்கு அபரிதமான எலும்பு வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் கைப்பிடியைப் பயன்படுத்துகிறார். உலகின் உயரமான ஆணான 8 அங்குலம் உயரம் கொண்ட சுல்தான் கோசனும் துருக்கியில்தான் வாழ்கிறார்.
Tags :