இலங்கைக்கு  கஞ்சா கடத்த முயன்ற  7 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை. 

by Editor / 13-12-2023 08:52:06pm
இலங்கைக்கு  கஞ்சா கடத்த முயன்ற  7 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை. 

தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் வெள்ளைப்பட்டி கடற்கரை பகுதியில், தூத்துக்குடி மாவட்ட போதை பொருள் நுண்ணறிவு பிரிவு காவல்துறை கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15ஆம் தேதி சோதனையில் ஈடுபட்டனர். 

அப்போது, தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்த முயன்றது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து, கஞ்சா கடத்த முயன்ற தூத்துக்குடியை சேர்ந்த மாரிக்குமார், கணேசன்,  பன்னீர்செல்வம் யோகேஸ்வரன், பிரேம்சிங், பாலமுருகன், அந்தோணி ஜெயராஜ் மற்றும் கடலூரை சேர்ந்த மன்சூர்அலி  ஆகியோரை கைது செய்து, அவர்களிடம் இருந்த 471 கிலோ கஞ்சாவை போதை பொருள் நுண்ணறிவு பிரிவு காவல்துறை பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பான வழக்கு மதுரை மாவட்ட முதன்மை போதைப்பொருள் மற்றும் மணமயக்கு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த நிலையில், வழக்கின் விசாரணை நீதிபதி செங்கமலச்செல்வன் முன்னிலையில் இன்று இறுதி விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகினார். விசாரணையில் முடிவில், அந்தோணி ஜெயராஜை மட்டும் விடுதலை செய்து, மீதமுள்ள 7 பேருக்கும் தலா 10 ஆண்டு சிறைத்தண்டனையும், தலா 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

 

Tags : இலங்கைக்கு  கஞ்சா கடத்த முயன்ற  7 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை. 

Share via