முன்னாள் முதலமைச்சர் மருத்துவமனையில் அனுமதி
கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி சனிக்கிழமை இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு காய்ச்சல் மற்றும் சோர்வு காரணமாக பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு தூசியால் லேசான நுரையீரல் தொற்று இருந்தது. தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அடுத்த மாதம் நடைபெறவுள்ள கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தலுக்காக, குமாரசாமி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டதால் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும், ஓய்வு எடுத்த பின் அவர் மீண்டும் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
Tags :



















