கட்டுமான பணியின்போது இடிந்து விழுந்த சுரங்கப்பாதை - 36 தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரம்

by Editor / 12-11-2023 05:20:36pm
கட்டுமான பணியின்போது இடிந்து விழுந்த சுரங்கப்பாதை - 36 தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரம்

உத்தரகாண்ட் மாநிலம், உத்தர காசி மாவட்டத்தில் பிரம்மகால் - யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில், சில்க்யாரா மற்றும் தண்டல்கானை இணைக்கும் சுரங்கப்பாதை கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்சம்பவத்தன்று  அதிகாலை 4 மணியளவில் சுரங்கப்பாதையின் 150 மீட்டர் நீளமுள்ள பகுதி இடிந்து விழுந்து, விபத்து ஏற்பட்டிருக்கிறது. இந்த விபத்தில் குறைந்தது 36 சுரங்கப்பாதைத் தொழிலாளர்கள் உள்ளே இடர்பாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. தேசிய, மாநில பேரிடர் மீட்புக் குழுக்கள் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து, மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இடிபாடுகளை அகற்ற இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டு ஆக்ஸிஜன் குழாய்கள் உள்ளே அனுப்பப்பட்டிருக்கின்றன. தொழிலாளர்களை மீட்க 2-3 நாள்கள் ஆகலாம் எனக் கூறப்படுகிறது. மீட்புப் பணிகள் குறித்துப் பேசிய உத்தரகாசி எஸ்.பி அர்பன் யதுவன்ஷி, ``சுரங்கப்பாதை தொடங்கும் இடத்திலிருந்து சுமார் 200 மீட்டர் தூரத்தில் விபத்து ஏற்பட்டிருக்கிறது. சுரங்கப்பாதை இடர்பாடுகளில் சுமார் 36 பேர் சிக்கியுள்ளதாகத் தகவல் கிடைத்திருக்கிறது.என்றும், மாநில பேரிடர் மீட்புக் குழு கமாண்டர் மணிகாந்த் மிஸ்ரா, ``பணியாளர்கள் மற்ற மீட்புப் பிரிவுகளுடன் ஒருங்கிணைந்து போர்க்கால அடிப்படையில் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக நம்புகிறோம்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

கட்டுமான பணியின்போது இடிந்து விழுந்த சுரங்கப்பாதை - 36 தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரம்
 

Tags : கட்டுமான பணியின்போது இடிந்து விழுந்த சுரங்கப்பாதை - 36 தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரம்

Share via