சானிட்டரி நாப்கினில் தங்கம் கடத்தல்: இருவர் கைது

by Staff / 23-05-2024 02:37:32pm
சானிட்டரி நாப்கினில் தங்கம் கடத்தல்: இருவர் கைது

மும்பை விமான நிலையத்தில் இரு பயணிகளிடம் ரூ.7.46 கோடி மதிப்பிலான 11.40 கிலோ தங்கம் மற்றும் பல எலக்ட்ரானிக் பொருட்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். துபாயிலிருந்து பயணித்த இருவரை சோதனை செய்ததில், அவர்கள் அணிந்திருந்த சானிட்டரி நாப்கினில் 2000 கிராம் எடையுள்ள 24 காரட் தங்கத் தூசிகள் பூசப்பட்டு இருந்தது தெரிய வந்தது. மேலும் அவர்களின் உடைகள், சானிட்டரி பேட், டிராலி, உள்ளாடைகளிலும் தங்கம் மறைத்து வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இருவரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
 

 

Tags :

Share via

More stories