அதிமுக பிரமுகர் படுகொலையில் அதே பகுதியை சேர்ந்த 2 பேரைபோலீசர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

by Editor / 10-09-2024 10:28:52pm
அதிமுக பிரமுகர் படுகொலையில் அதே பகுதியை சேர்ந்த 2 பேரைபோலீசர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அடுத்துள்ள மேலநீலிதநல்லூர் பகுதியைச் சார்ந்த கிருஷ்ணசாமி என்பவரது மகன் வெளியப்பன் (அதிமுக பிரமுகர் ) வழக்கம்போல நடை பயிற்சி சென்றபோது  கடந்த 8 ஆம் தேதி மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். படுகொலை செய்யப்பட்டவரது மனைவி மாரிச்செல்வி மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தின் முன்னாள் துணைத் தலைவராக இருந்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அப்பகுதியில் நடைபெற்ற கோவில் திருவிழாவின் போது ஏற்பட்ட மோதலில் போது முன் விரோதம் காரணமாக இந்த படுகொலை சம்பவம் நடைபெற்றிருக்கலாம் என்ற கோணத்தில் 2 பேரை பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.இதில் முன்விரோதம் காரணமாக வெளியப்பன் கொலைசெய்யப்பட்டதும் இந்தக்கொலையை செய்தது அதே பகுதியை சேர்ந்த பாலமுருகன்மற்றும் கோவேந்திரன் ஆகிய இருவரும் எனத்தெரிய வந்தத்தை தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்செய்து சிறையில் அடைத்தனர்.மேலும் இவ்வழக்குதொடர்பாக தொடர்விசாரணை நடந்துவருவதாக தென்காசி மாவட்ட காவல்துறை விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

 

Tags : சங்கரன்கோவில் அருகே அதிமுக பிரமுகர் படுகொலையில் அதே பகுதியை சேர்ந்த 2 பேரைபோலீசர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Share via

More stories