மனைவி கண் முன்னே பறிபோன கணவரின் உயிர்
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள எரியோடு பாண்டியன் நகரை சேர்ந்தவர் மகாலட்சுமி. இவரது காதல் கணவர் முகம்மது அமீர்கான்(27). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று துணிகளை துவைப்பதற்காக அருகே உள்ள பாறைக்குழிக்கு இருவரும் சென்றுள்ளனர். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டபோது, அமீர்கான் தண்ணீருக்குள் குதிக்கப்போவதாக மகாலட்சுமியை மிரட்டியுள்ளார். கணவர் தன்னுடன் விளையாடுவதாக நினைத்துக் கொண்ட மகாலட்சுமி நடப்பதைக் கண்டு கொள்ளாமல் துணி துவைத்துக் கொண்டிருந்தார். ஆனால், கால் தடுமாறி தண்ணீருக்குள் விழுந்த அமீர்கான், கொடிகளில் சிக்கி உயிரிழந்தார். தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் அமீர்கானின் உடலை மீட்டனர்.
Tags :