லாரியில் சிக்கி பசுக்கள் பலி - பெண் படுகாயம்

by Staff / 23-03-2023 01:25:48pm
லாரியில் சிக்கி பசுக்கள் பலி - பெண் படுகாயம்

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் வட்டம், வேப்பத்தூரைச் சேர்ந்த கணேசன் மகள் புவனேஸ்வரி (20). இவர் பணி முடிந்து வீடு திரும்பும்போது கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனை அருகே உள்ள பஸ் ஸ்டாண்டில் நேற்று முன்தினம் மாலை நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த சரக்கு வாகனம் புவனேஸ்வரி, மற்றும் 2 பசு மாடுகள் மீது மோதி அருகிலிருந்து கட்டிட வளாகத்திற்குள் கவிழ்ந்தது. இதில் படுகாயமடைந்த புவனேஷ்வரி உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை சேர்க்கப்பட்டார். இந்த விபத்தில் வேனுக்கு அடியில் சிக்கி 2 பசு மாடுகளும் உயிரிழந்தனர்.

 

Tags :

Share via

More stories

Logo