காதலியை எரித்துக்கொன்ற காதலன்

தமிழகத்தில் திருப்பூர் மாவட்டம் பனபாளையத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் அப்பகுதியில் உள்ள கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். அங்கு வாலிபர் ஒருவருடன் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது. இந்நிலையில், நேற்று மாலை தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அந்த இளம்பெண் தனது காதலனை வற்புறுத்தியுள்ளார். அப்போது அவரது காதலன் அந்த பெண்ணை கல்லால் தாக்கி பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். பின்னர் பைக்கில் தப்பி ஓடும்போது கீழே விழுந்து படுகாயமடைந்தார். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த அந்த பெண் இன்று காலை உயிரிழந்தார்.
Tags :